மீண்டும் சீமெந்தின் விலை அதிகரிப்பு ! srilanka tamil news

 (srilanka tamil news-tamillk) வட் வரி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டுமானப் பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளதாக கட்டடத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

srilanka tamil news


இதன் காரணமாக மணல், சீமெந்து, இரும்பு, கம்பி, மின்சாதனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம். டி பால் தெரிவித்தார்.


இதற்கமைய ஒரு கியூப் மணல் 1500 ரூபாவினாலும், சீமெந்து மூட்டை ஒன்று 300 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




மின் உபகரணங்கள்

மேலும் புதிதாக வற் வரி சேர்க்கப்பட்டுள்ளமையினால் மின் விளக்குகள் உள்ளிட்ட சில மின் உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்