வவுனியாவில் கடும் பனி - சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது! vavuniya news

 (vavuniya tamil news-tamillk) வவுனியாவில் இன்று வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

vavuniya news


வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணிவரை நுவ்வரலியா மாவட்டம் போல் காட்சி அளித்ததுடன் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. 




இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.




ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்ச்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்