Brother-brutally-beaten-to-death-with-scissors
கொழும்பு - பொரளை செர்பன்டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார்.
பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம் முற்றி, சந்தேக நபரான மூத்த சகோதரர் கத்தரிக்கோலால் நெஞ்சுப் பகுதியில் தாக்கியுள்ளார்.
கத்திரிக்கோல் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவரும் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் கைது
59 வயதுடைய சந்தேகநபரின் சகோதரன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தரிக்கோலுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka



