யாழில் இரு பேருந்துகள் மோதி விபத்து! - 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி! jaffna news

 (jaffna tamil news-tamil lk news) யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

jaffna news


வைத்தியசாலையில் சிகிச்சை 

ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மூவர் சிறியளவான காயத்துடனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


பேருந்தின் சாரதிகள் இருவரும் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்து வீதியில் நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




இதன்போது இரண்டு பேருந்துகளும் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன், காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.




சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்