வவுனியாவில் தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கிடையே மோதல்! vavuniya news

(vavuniya news-tamil lk news)  வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (23.01.2024) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

vavuniya news-tamil lk news


இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்து தரிந்து நின்றுள்ளது.


இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வருகை தந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக தரிந்து நின்றுள்ளது.

வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில்

இதன் போது இரு பேரூந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இ.போ.ச பேரூந்தின் லைட் உடைக்கப்பட்டது.


இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச, தனியார் பேரூந்து ஆகிய இரு பேரூந்தின் நடத்துனர், சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


வவுனியா பொலிஸார் விசாரணை

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேரூந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றமையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்