srilanka tamil news- விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான இளைய பிக்கு ஒருவரைக் கொடுமையான முறையில் வன்கொடுமை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டில், 20 மற்றும் 17 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக மீஹகதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
மீஹகதென்ன கும்ஒதுவ மற்றும் களுபஹன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டில்
இளைஞர்கள் இருவரையும் விகாரைக்கு அழைத்து வந்த விகாராதிபதி, வாசஸ்தலத்தில் வைத்து புதிய தேரரை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய விகாராதிபதி தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் அவர் நாடு திரும்பியதும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka