(srilanka tamil news-tamillk) கடந்த 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரண்டாம் தவணை
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டத்தை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு முன்னர் தீர்மானித்திருந்தது.
முன்னதாக, க.பொ .த உயர்தர விவசாய விஞ்ஞான பாட பரீட்சையின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அந்த பாடத்துக்கான இரண்டு பரீட்சைகளும் இடம்பெறவுள்ளன.
பரீட்சைக்கு முன்னதாகவே வினாத்தாள் வெளியானதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,பெப்ரவரி மாதம் முதலாம் திகதி காலை 08.30 முதல் 11.40 வரை விவசாயம் இரண்டாம் பகுதி பரீட்சையும், பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரை முதல் பகுதி பரீட்சையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |