(srilanka tamil news-tamil lk news) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள்
அதன்படி நாளையதினம்(23) முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சகல பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாகவும் அதேவேளை தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறைமையிலும் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய நிகழ்நிலை முறைமை மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Tags:
srilanka



