இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 11 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதில் ரெனோ 11 மற்றும் ரெனோ 11 புரோ மாடல்கள் அடங்கும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம்.
அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் ரெனோ போன் வரிசையில் ரெனோ 11 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
ரெனோ 11 5ஜி - சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் ஃபுல்-ஹெச்டி+ OLED கர்வ்டு டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7050 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 50 + 32 + 8 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் மூன்று கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி / 256ஜிபி என இருவேறு ஸ்டோரேஜ் வேரியண்ட்
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- வரும் 25-ம் தேதி முதல் சந்தையில் விற்பனை தொடங்குகிறது
- இந்த போனின் விலை ரூ.29,999 முதல் ஆரம்பமாகிறது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
Technology