(moothur tamil news-tamillk) வட்வரி அதிகரிக்கப்பட்டமைக்கும், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் எதிர்ப்புத் தெரிவித்து மூதூர் பிரதான வீதியின் முன்பாக இன்று(18) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் மூதூர் கிளை ஏற்பாடு செய்திருந்ததுடன் இதன்போது நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்புச் செய்யப்பட்டதை வலியுறுத்தும் வகையில் மரக்கறிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
எதிராக சுலோகங்கள்
அத்தோடு வரி அதிகரிப்பைக் கொண்டு வந்த , ரணில் அரசாங்கத்திற்கு எதிராக சுலோகங்கள் ஏந்தப்பட்டு கோசங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |