(trincomalee news-tamillk) திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருகோணமலை வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவும் சிற்றூழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி சிற்றூழியர்களினால் இன்று (12) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை முதல் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக வைத்திய சேவையை பெற்றுக் கொள்வதற்காக வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமையும் குறித்த கோரிக்கையை முன்வைத்து சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |