பயிற்சி வகுப்பு செல்வதற்கு பணமில்லை! மாணவி எடுத்த விபரீத முடிவு! tamil lk news

 கல்விச் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் 16 வயதுடைய மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

tamil lk news

இம்முறை பொதுப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பதுளை, புவக்கொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய இந்த மாணவி, கடும் நிதி நெருக்கடியில் வாழ்ந்து வந்த குடும்பத்தின் மூத்த பிள்ளையாவார்.


இந்த முறை, க.பொ.த  சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள குறித்த மாணவி குடும்பப் பொருளாதாரப் பின்னணியால் கல்வி நடவடிக்கையினை
மேற்கொள்வதில் சிரமங்களை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


சமீபத்தில், குறித்த மாணவி , கணித பாடத்திற்கு பயிற்சி வகுப்புக்கு செல்ல விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.


ஆனால், அவர் மிகவும் கஷ்டத்தில் வாழ்வதால் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார்.


இந்நிலையில், குறித்த மாணவி  தனது வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில்  உறவினர்கள் உடனடியாக குறித்த மாணவியை மீட்டு பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


எனினும்,  சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்