திருகோணமலை மனிதப் படுகொலையின் 28 ஆண்டுகள் நிறைவு! tamil lk news

 திருகோணமலை - மூதூர், குமாரபுரம் பகுதியில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

tamil lk news


இந்த நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று (11.02.2024) முன்னெடுக்கப்பட்டது.

tamil lk news


மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் தவறான நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கொடூர சம்பவம் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.


எனினும், கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தநிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.


இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததோடு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27 ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும்  அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 28 ஆண்டுகளுக்கு பின்னரும் நீதி கிடைக்காமல் நீதி கோரி வரும் நிலையில் நேற்று படுகொலையின் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.


மேலும், பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்