வவுனியாவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது....! tamil lk news

 (vavuniya tamil news) வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்தனர்.



குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை போலீஸ் அதிகாரியின் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையிலான,


பொலிஸ் சார்ஐன்களான கீர்த்தி ரத்தின (48001), சொய்சா (67436), டிசாநாயக்க (34831), பொலிஸ் கொஸ்தாபர்களான குமார (77779), விதுசன் (91800) ஆகியோரினால் தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொலிசார் இன்று சோதனைகளை முன்னெடுத்தனர்.

மேலதிக விசாரணை

இதன்போது 80000 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்