பேருந்துகளில் இன்று முதல் விசேட நடைமுறை! tamil lk news

 

tamil lk news

பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்

பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக இந்த விசேட நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரகசியமான முறையில் கமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த பொலிஸ் உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்