வடக்கு - கிழக்கு தழுவிய கர்த்தாலுக்கு ஆதரவு இல்லை; வவுனியா வர்த்தகர் சங்கம்! Vavuniya News

Tamil lk News


 Vavuniya News

 இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று  வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி  தெரிவித்துள்ளார்.



 அழைப்பு 

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 




குறித்த கர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்கவேண்டும் என வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் இருதினங்களுக்கு முன்பாக நேரடியாக சந்தித்து ஆதரவை கோரியிருந்தார்.




இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்காக வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை இன்று கூடியது.  இதன்போது அநேகமான நிர்வாகசபை உறுப்பினர்கள் அன்றையதினம் வியாபாரநிலையங்களை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.




இதனையடுத்து எதிர்வரும் திங்கள்கிழமை வியாபார செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வவுனியா வர்த்தகர் சங்கம் கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் தலைவர் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்