திருகோணமலையில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது! tamil lk news

 திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மணிபுர பகுதியில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் இன்று (07) சந்தேக நபரொருர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

trincomalee news-tamil lk news


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டையை சேர்ந்த 31 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.


புல்மோட்டை விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து,  குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் எட்டு ஹக்கபட்டஸ் என்று அழைக்கப்படும் வாய் வெடிகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்ததாகவும் இதனையடுத்து அவரை புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரியவருகிறது.


இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்