சிறையில் அடுத்தடுத்து பெண்கள் கர்ப்பமாவதால் பரபரப்பு! tamil lk news

tamil lk news


 சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளிலேயே இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது.

அண்மையில் சிறைச்சாலையில் சோதனை செய்தபோது பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பம் தரித்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஆண் சிறைச்சாலை

இந்த நிலையில் பெண் கைதிகள் இருக்கும் பகுதிக்கு ஆண் சிறைச்சாலை ஊழியர்கள் நுழைவதற்கு தடை செய்ய வேண்டும் என மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அன்றைய தினம் அதிரடி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேற்குவங்க சிறையில் பெண் கைதிகள் அடுத்தடுத்து கர்ப்பமாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்