வெளிநாட்டு ஆசையால் இளைஞர் உயிரிழப்பு! tamil lk news

tamil lk news

வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுமோ என்ற மன அழுத்தத்தில் சிலாபம்- முந்தல் பகுதியில் இளைஞன் ஒருவன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் நேற்று   திங்கட்கிழமை (19) மீட்கப்பட்டுள்மை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் காவிந்த மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த இளைஞனின் தாயும், சகோதரியும் சந்தைக்கு சென்ற நிலையில், வீட்டில் இளைஞனும், தந்தையுமே இருந்துள்ளனர். இதன்போது, தந்தை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞன் வீட்டின் அறையொன்றுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார்

சந்தைக்கு சென்ற தாயும், சகோதரியும் வீட்டுக்கு வந்து , மகனை தேடி அறையின் கதவை தட்டி அழைத்த போதும் இளைஞனிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காதமையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இளைஞன்  சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதிலும், இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் வெளிநாடு செல்வதற்காக 75,000 ரூபாய் பணம் கேட்டதாகவும், தற்போது கையில் பணம் இல்லாததால் , மோட்டார் சைக்கிளை விற்று அல்லது அடகு வைத்து பணத்தை ஒழுங்கு செய்து தருவதாக தான் கூறியதாக வீட்டினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்