(srilanka tamil news) பால் மாவின் விலை அடுத்த சில நாட்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பால் மா இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போது, பால் மாவின் விலையை குறைப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, 01 கிலோ பால் மாவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக இந்த குறைப்பு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஒரு கிலோ பால் மாவின் விலையை 100 ரூபாவால் மட்டுமே குறைக்க முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka