யாழில் பாடசாலை மாணவர்களின் வியத்தகு செயல்!! jaffna news

 (jaffna tamil news) யாழிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியில்  தற்போது அதிகரித்துவரும் வீதிவிபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் தமது  விளையாட்டு இல்லத்தை அலங்கரித்து அனைவரது கவனத்தையும் தம்பால் ஈர்த்துள்ளனர்.

jaffna tamil news


இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,


யாழ் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி  பாடசாலையின் அதிபர் பா.பாலகுமார் தலைமையில் நேற்றுமுன்தினம்(13) இடம்பெற்றது.


குறித்த விளையாட்டு போட்டியில் பாரதி, வள்ளுவர்,கம்பர் என மூன்று இல்லங்கள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் இடம்பெற்றதுடன் பாரதி இல்லம் இம்முறை முதலாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது.


அதேவேளை,  குறித்த விளையாட்டுப் போட்டியில் பாடசாலை மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட  இல்ல அலங்கரிப்பில்,  பேருந்து சாரதிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் ஏற்படும் விபத்தினை தத்துரூபமாக காட்டும் இல்லம் ஒன்று விளையாட்டு போட்டியில் அமைக்கப்பட்டிருந்தமை அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்திருந்தது.


இதில், பாரதி இல்லம் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான மாதிரியை இல்லமாக  அலங்கரித்திருந்தது.


காங்கேசன்துறை- யாழ்ப்பாணம் 769 வழித்தடங்களில் பயணிக்கும் அரச பேருந்து ஒன்று நடைபாதையில் மாணவர் ஒருவரை மோதித் தள்ளுவதை சித்தரிக்கும் முகமாக இல்லம் அமைக்கப்பட்டதுடன் பொறுப்பற்ற சாரதிகளால்  விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை சுட்டிக்காட்டும் விதமாக இவ் இல்லம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்