இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

 

tamil lk news

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்று (04) இரவு திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.


பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், அது இன்று இடம்பெறும் என கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.



இதேவேளை எவ்வாறாயினும், இன்று எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெட்ரோல், ஒக்டேன் 95 பெட்ரோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.


இதேவேளை, மின்சார விநியோகம், பெட்ரோலியப் பொருட்கள், எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகத்துடன் தொடர்பான அனைத்து சேவைகளையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிபரின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விநியோகஸ்தர்களின் மாதாந்த தள்ளுபடி பணத்திலிருந்து 35 வீத பாவனை கட்டணத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று முதல் அறவிடப் போவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


இதன் ஊடாக விநியோக நடவடிக்கைகளுக்கு அன்றாட செலவுகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படும் என சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்