விபத்தில் கணவர் உயிரிழப்பு; மனைவி எடுத்த முடிவால் உறவினர்கள் அதிர்ச்சியில்......!

p>

tamil lk news
 

கணவர் விபத்தில் உயிரிழந்த சோகம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி அருகே, வடக்கு அயித்தாம்பட்டியை 



சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவரது மனைவி கலா (27). விவசாயி. இந்த தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்த நிலையில் உலநல குறைவால் உயிரிழந்துள்ளது.

இந்த நிலையில் சிலம்பரசனும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான குபேந்திரன் (21) என்பவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற மனைவி, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து உயிரிழந்துள்ளார். 


இந்த நிலையில் விபத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்