இன்று நள்ளிரவு முதல் ஸ்தம்பிக்கவுள்ள சேவை...!

 

srilanka tamil news

நாடளாவிய ரீதியில் இன்று (05.03.2024) நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தன லால் இன்று தெரிவித்துள்ளார்.

அதற்கமைய புகையிரத சாரதிகள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்