வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி....! பணம் அனுப்பும் வசதி...!

tamil lk news


வாட்ஸ்அப் செயலி மூலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 


உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப் செயலியை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர். இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.

வாட்ஸ்அப் செயலி கடந்த காலங்களில் இருந்து ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மற்றுமொரு புதிய அம்சத்தையும் வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் UPI Settings கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை 140 இற்கும் மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சர்வதேச UPI Payment மேற்கொள்ளும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இது தற்போது தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த புதிய அம்சம் தொடர்பான மேலதிக அப்டேட்கள் (updates) இனி வரும் காலங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்