(srilanka tamil news) கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
ஜனவரி 23 ஆம் திகதி, கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹட்டன கனராம விகாரையில் பணிபுரிந்த கலப்பலுவ தம்மரதன தேரரை காரில் வந்த குழுவினர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் நேற்று (11) பிற்பகல் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபர் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் தப்பிச்செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



