வெடுக்குநாறிமலை விவகாரம்: பூசகர் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் முன்னிலை....! vavuniya news

 

vavuniya news

(vavuniya tamil news) வவுனியா - வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  


ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றில் இன்று வழக்கு இடம்பெற்றுவருகின்றது.

கடந்த 08 ஆம் திகதி வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த 9 ஆம் திகதி மாலை முன்னிலைப்படுத்தினர். 


இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.




மேலும் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும் நீதிமன்றுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்