70 அடி பள்லத்தில் பாய்ந்த ஜீப் வண்டி

 

tamil lk news

கம்பளை தெல்பிடிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று அதிகாலை 4 மணியளவில் பொலெரோ வகை ஜீப் வண்டி ,பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இதன்போது ஜீப் வண்டியில் 15 பேர் பயணித்த நிலையில் ,10 பேர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீட்டில் கலந்து கொண்டு திரும்பிய குழுவினரின் பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்