யாழ்ப்பாணம்(Jaffna) வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடந்த முகம் சுழிக்க வைக்கும் மற்றுமொரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
மத போ(தை)தனையில் ஒருவரை ஒருவர் தாக்கியதுடன் தேவாயத்தில் நின்று தகாத வார்த்தை பிரயோகங்களிலும் பெண்கள் ஈடுப்பட்டமை முக சுழிக்க வைத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவு பெற்ற பின் குறிப்பிட்ட கும்பல் மறைக்கல்வி நடைபெரும் இடத்தில் மறைக்கல்வி மாணவர்களுக்கு முன் மறை ஆசிரியர்களை அவதூறுகளான வார்த்தைகளால் பேசியவாறு வெளியே சென்றனர்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்றபோது ஆலய பங்கின் பங்குத் தந்தை எங்கே சென்றார் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.