காலநிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்று(06.04.2024) நண்பகல் 12.12 அளவில் லெல்லோப்பிட்டி, பலாங்கொடை, புலத்சிங்கள, கல்தோட்டை மற்றும் வாத்துவை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, நேற்று(05.04.2023) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இதேவேளை மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.