(srilanka tamil news) எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ (Sheldon Fernando) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 03 வீத கொமிஷனில் 18 வீத VAT அறவிடப்படுவதாகவும், அதனை நிறுத்துமாறு அனைத்து பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால் செவ்வாய்க்கிழமை (09) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானமொன்றினை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
srilanka