டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கிளிநொச்சியில் அமைதியின்மை....!

tamil


 கிளிநொச்சி - பூநகரி (Kilinochchi) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு (Douglas Devananda) எதிராக பொதுமக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 


இதன்போது டக்ளஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியுள்ளதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.


பொன்னாவெளி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலைக்கான வேலைத்திட்டங்களை இன்று (05.04.20214) ஆரம்பித்து வைப்பதற்காக அவர் சென்றிருந்த போதே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி -  பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சரால் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.



இதன்போது, அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் டக்ளஸிற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியுள்ளதையடுத்து பொலிஸார் பிரச்சினைளை கட்டுப்படுத்தியுள்ளனர். 



மேலும், தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வரும் அதேவேளை, திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்