வவுனியாவில் கணவனின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி எடுத்த விபரீத முடிவு....! vavuniya news

 (vavuniya tamil news) நெடுங்கேணியில் மாரடைப்பினால் கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

Vavuniya tamil news-tamil lk news


இந்த சம்பவம் இன்று (18.04.2024) இடம்பெற்றுள்ளது. 49 வயதுடைய ராமச்சந்திரன் ரவீந்திரன் மற்றும் 49 வயதுடைய ராமச்சந்திரன் ஜோதீஸ்வரி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.


வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து குறித்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாராகிய போது குறித்த குடும்பஸ்தரின் மனைவி வவுனியா வைத்தியசாலை செல்வதற்கான பொருட்களை எடுத்து வர வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.


குறித்த தகவலை வீட்டிற்கு சென்றிருந்த அவரது மனைவிக்கு தெரியவந்ததையடுத்து, கணவனின் இறப்பை தாங்க முடியாது மனைவி தவறான முடிவெடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



உயிரிழந்த இருவருக்கும் 18 மற்றும் 15 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் இச்சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்