23 கோடி ரூபா பெறுமதியான அதிர்ஷ்டத்துடன் கைது..!

 புத்தளம் - கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான திமிங்கலத்தின் எச்சங்களுடன் இரண்டு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

tamil lk news


இரகசியமான முறையில்

அத்துடன், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் கடலில் மிதந்த 23 கிலோ நிறையுடைய திமிங்கல எச்சங்களை இரகசியமான முறையில் எடுத்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




மேலும், கடற்றொழிலாளர்களிடமிருந்த திமிங்கல எச்சங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


(Srilanka Tamil News......)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்