மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நுகேகொடை பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்குச் சென்ற நிலையில் அங்கு மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவர் ஒரு வகை மருந்துகளைப் பயன்படுத்துவதாகச் மாணவிக்குத் தெரியவந்துள்ள நிலையில், இந்த இளைஞர் ஒருவித காச நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த மாணவி, இளைஞருடனான காதல் உறவை முறித்துக்கொண்டுள்ளதுடன், மற்றுமொரு இளைஞரொருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்தனர்.
- மகனை கொடூரமாக தாக்கி காணொளி வெளியிட்ட தாய்க்கு ஏற்பட்ட கதி...!
- தகாத உறவால் 23 வயதான இளம் மனைவி கொலை; தற்கொலை என நாடகமாடிய முல்லைத்தீவு கணவன்!அதிர்ச்சி சம்பவம்
- கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து - 27 பேர் காயம்-ஆபத்தான நிலையில் 7 பேர்
இதனை அறிந்துகொண்ட சந்தேக நபரான இளைஞர், இந்த மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்த காலத்தில் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
முறைப்பாடு
சமூக ஊடகங்களில் இந்த புகைப்படங்களைப் பார்த்த மாணவியின் நண்பர்கள் சிலர், இது தொடர்பில் மாணவிக்குத் தெரிவித்ததையடுத்து, அவர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கெஸ்பாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
(Srilanka Tamil News......)