பிறந்தநாள் தினத்தில் இராணுவ வாகனத்தில் மோதி உயிரிழந்த யுவதி...!! Jaffna News

 யாழ்ப்பாணத்தில்(Jaffna) இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (20) இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியோரமாக, வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதியை மோதி விபத்துக்கு உள்ளானதில் யுவதி உயிரிழந்திருந்தார். 

tamil lk news


வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) என்பவரே தனது 23ஆவது பிறந்தநாளான நேற்றையதினம் உயிரிழந்திருந்தார். 


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


விசாரணைகளின் பின்னர் இராணுவ சிப்பாயை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சிப்பாயை 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது 


அதேவேளை, குறித்த வாகனத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் , அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்