யாழ்ப்பாணம் (Jaffna)- பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்களின் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, இன்று (21.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் பூநகரி பாலம் தாண்டி வந்துகொண்டிருந்த போது பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



