விருந்தில் முற்றிய வாக்குவாதத்தால் விபரீதம்; வைத்தியர் மற்றும் மனைவிக்கு நேர்ந்த துயரம்..!

 புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்தியர் மற்றும் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த வீட்டில் இடம்பெற்ற விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

tamil lk news


இதன்போது பலத்த காயங்களுக்குள்ளான வைத்தியரும் அவரது மனைவியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றும் 33 வயதான சாமுவேல் ஜோன்சன் மற்றும் அவரது 20 வயது மனைவி சுப்ரமணியம் பிரித்திகா ஆகியோரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.


வைத்தியரின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது அங்கிருந்த ஒருவரே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Srilanka Tamil News.....)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்