வவுனியாவில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தம்! Vavuniya News

 வவுனியாவில் (vavuniya) பரீட்சை வினாத்தாளை உரிய நேரத்திற்கு முன்பாக வாங்கிய மேற்பார்வையாளர் இடை நிறுத்தம் வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

tamil lk news


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதரணதரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை நிலையம் ஒன்றில் உள்ள மாணவர்கள் சிலரிடம் விடைத்தாள்கள் பெறப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது. 



குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வலயக்கல்விப் பணிமனை குறித்த பரீட்சை நிலையில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோகர் ஒருவரை இடைநிறுத்தியுள்ளதுடன், குறித்த சம்பவத்தின் போது குறித்த நிலையத்தில் உதவி மேற்பார்வையாளராக கடமையாற்றியவரை மேற்பார்வையாளராக நியமித்துள்ளதுடன், புதிதாக உதவி மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Vavuniya Tamil news....)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்