தாயின் கைகளை கட்டிவிட்டு 27 வயது பெண் கடத்தல்....! tamil lk

 

tamil lk news

காலி - உடுகம பகுதியில் 27 வயது பெண்ணொருவரை கடத்திச்சென்று தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பிரதான சந்தேகநபர் மேலும் மூவருடன் சேர்ந்து பெண்ணின் வீட்டிற்கு வந்து தாயின் கைகளை கட்டிவிட்டு வாகனத்தில் அவரை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


பெண்ணை கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் செல்லகதிர்காமம் பகுதியில் வீடொன்றில் பெண்ணுடன் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  58 வயதுடைய தொடருந்து ஓட்டுநர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், சந்தேகநபருடன் வந்த ஏனைய மூன்று சந்தேகநபர்களும் காலி, குருந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கடத்தப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும் அவரது கணவர் அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்