புத்தளத்தில் பல கோடி ரூபா பெறுமதியான அம்பர் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனை விற்பனை செய்ய முயற்சித்த ஐந்து பேரையும் இதன்போது கைது செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் ,வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான அம்பர் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
வன்னாத்தவில்லு பொலிஸ் விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை மீட்ட மீனவர்கள், விற்பனை செய்யும் நோக்கில் புதைத்து வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அம்பர் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணி உரிமையாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Srilanka Tamil News......)
Tags:
srilanka



