யழ்ப்பாணம்(Jaffna) மாவட்டம், கந்தர்மடத்தில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து, பலாலி வீதி, கந்தர்மடம், மணற்தரை வீதியில் இயங்கிய விபச்சார விடுதியை முற்றுகையிட்டனர்.
முற்றுகையின்போது, அந்த வீட்டின் உரிமையாளர், இரு விபச்சார பெண்கள், ஒரு வாடிக்கையாளர் ஆகியோர் அந்த வீட்டில் இருந்தனர்.
மற்றொருவர் மதில் பாய்ந்து ஓடிவிட்டார். அவர் தப்பியோடும் போது தொலைபேசி கீழே விழுந்ததில் அதை மீட்டு பொலிஸார் பரிசோதனை செய்ததில் அவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபச்சார பெண்கள் நீர்வேலி, பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த 23, 28 வயதானவர்கள். அவர்களிடம் வந்த வாடிக்கையாளர் கோப்பாயை சேர்ந்த 24 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.
சமீபத்தில் யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அருகில் விபச்சார விடுதியொன்று சிக்கியது. அது சிக்கியதை தொடர்ந்து, அந்த விடுதியை நடத்திய நபர் இந்த விடுதியுடன் தொடர்புபட்டு செயற்பட்டதாக கைதான பெண்ணொருவர் தெரிவித்தார்.
குறித்த நபரே வெள்ளை நிற முச்சக்கர வண்டியில் தன்னை இந்த விடுதியில் கொண்டு வந்து இறக்கி விட்டதாகவும், அவரே வாடிக்கையாளர்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.