நாட்டில் டெங்கு நோய் தலைதூக்கும் ஆபத்து!மக்களுக்கு எச்சரிக்கை

 இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24,645 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு(Ministry of Health) தெரிவித்துள்ளது.

நோயாளர் அடையாளம்

இந்நிலையில், மேல் மாகாணத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான  நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 5,289 நோயாளர்களும், 
  • கம்பஹா மாவட்டத்திலிருந்து 2,309 நோயாளர்களும்,
  • களுத்துறை மாவட்டத்திலிருந்து  1,307  நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் அமைச்சு தெரிவித்துள்ளது.

(Srilanka Tamil News......)

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்