திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் பல இலட்சம் பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று வீட்டின் உரிமையாளர், வீட்டை பூட்டி விட்டு திருகோணமலை கடற்படைக்கு முன்னால் தனது கடையில் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது தனது வீடு தீப்பற்றி எரிவதாக அவருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனையடுத்து, உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119இற்கு அறிவித்துள்ள நிலையில், தீயனைப்பு பிரிவுக்கும் அறிவித்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் இதில் பல பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எறிந்து நாசமாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வீடு தீ பற்றியமை தொடர்பில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
(Trincomalee Tamil news......)