பதுளை, லுணுகல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்ற போது கொல்லப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான உயிரிழந்த பெண்ணின் கணவரான 45 வயதுடையவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 36 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் சுமித்ரா தமயந்தி எனப்படும் 36 வயதுடைய தும்பபிட்டியவத்த, ஜனதாபுர, லுனுகல என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக சந்தேகநபர் மனைவி பிள்ளைகள் வசிக்கும் வீட்டிற்கு வர நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரதான சந்தேகநபரின் நண்பர் என கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி முதலில் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணைகளின் பின்னர் பிரதான சந்தேகநபர் நேற்று இரவு லுனுகல நகருக்கு அருகில் வீதியொன்றில் இருந்து தப்பிச் செல்ல காத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்ட விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி மதியம் தனது வீட்டை அடுத்துள்ள கும்புக்கன் ஓயாவுக்கு மனைவி வந்த போது, முதலில் சிறு கல்லால் தாக்கியதாகவும் அதில் கீழே விழுந்த அவர் மீது பெரிய கல்லை போட்டு கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனையை பதுளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது.
தலையில் பலத்த அடி மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணயின் பின்னர் பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரையும் அவரது நண்பரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Srilanka Tamil News......)



