திருகோணமலை வீதியில் கோர விபத்து: இருவர் பலி - 33 மேற்பட்டோர் காயம்

  Srilanka Tamil News

tamil lk news

திருகோணமலை (Trincomalee) - ஹபரண வீதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


பேருந்து ஒன்றும் வானும் மோதியதில் இன்று (01) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



இதன்போது, வானின் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


 இந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் குழுவொன்று தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்