இந்தோனேசியாவில் பேருந்து விபத்து : மாணவர்கள் உட்பட 11பேர் பலி...!

 

tamil lk news

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த விபத்தில் 53 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பேருந்தின் தடுப்பு செயலிழந்ததன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்