புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம் - Jaffna news

 

tamil lk news -Jaffna news

புதிய மார்க்சிச லெனினிஷக் கட்சியின் மே தின ஊர்வலம் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னெடுக்கப்பட்டது.

ஆரியகுளம் சந்தியிலிருந்து யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபம் வரை பேரணியாக சென்று ரிம்மர் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.


உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம் நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளுடன் புரட்சிகர மேதினம் முன்னெடுக்கப்பட்டது

புதிய மாக்சிய லெனினிஷக் கட்சியின் வட பிராந்திய செயலாளர் செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அரசியல் குழு உறுப்பினர்களான க.தணிகாசலம், சட்டத்தரணி சோ.தவராஜா, எம்.இராசநாயகம், ச.நித்திகா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதன் போது புரட்சிகர பாடல்கள் இசைநிகழ்வுகள் உரையாடல்கள் என்பன இடமாபெற்றன.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்