யாழ்ப்பாணம்(Jaffna) - உடுவில் பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகிநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (10) உடுவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை பொழிந்துள்ளது.
அதன்போது, மின்னல் தாக்கத்தால் வீடொன்றில் இருந்த தென்னை மரம் தீ பற்றி எரிந்துள்ளதோடு, நபர் ஒருவரும் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(Jaffna Tamil News.....)