வாடகை வீடுகளில் தங்கியிருப்போர் தொடர்பில் ஆராய பொலிஸார் நடவடிக்கை!

tamil lk news

 

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் தொடர்பில் ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .


குறித்த நபர்கள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்தே பொலிஸார் ஆராயவுள்ளனர். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 112,963 நபர்கள் வாடகை வீடுகளிலும் 10,755 குடும்பங்களைச் சேர்ந்த 34,133 நபர்கள் வாடகை அறைகளிலும் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதாக தெரியவந்துள்ளது.


சட்ட நடவடிக்கை

இந்நிலையில் இவ்வாறு வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பற்றிய விபரங்கள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் இவ்வாறு தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Srilanka Tamil News.....)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்